EPISODE 23
நீலகண்டனிடம் வந்தவள் அவள் வராத இரண்டு நாட்களில் செய்ய வேண்டிய வேலையகள் எதுவும் இருக்கிறதா என்று கேட்து அதை தெரிந்து கொண்டு தன் வேளையில் மூழ்க ஆரம்பித்த்து இருந்தாள்.
நீலகண்டன் காந்தள் வேலை செய்வதையும் , அவள் வேளையில் காட்டும் ஆர்வத்தையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். வேளைக்கு சேர்ந்த புதிதில் ஒருவர் ஆர்வமாக அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டு செய்து கொண்டு இருப்பார்கள் . அனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களின் வேளையில் ஒரு வித சுணக்கம் ஏற்படும் . செய்யும் வேலையில் தேக்கம் ஏற்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கும்.
ஆனால் காந்தளை பற்றி தன்னிடம் ராணி சொன்னது அனைத்தும் உண்மைதான் வேலை என்று வந்துவிட்டால் காந்தள் மற்ற எதிலும் தன் கவனத்தை செலுத்தாமல் அவள் வேளைகளில் மூழ்கிவிடுவாள் .
இங்கே வந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. வந்த பொது அவள் எப்படி வேலை செய்ய ஆரம்பித்து இருட்னஹாலோ அதே போல் தான் இப்போதும் வேலை செய்துகொண்டு இருக்கிறாள் என்று அவர் புரிந்துகொண்டார் .
மாலை வேலை முடிந்ததும் அனைத்தையும் நீலகண்டான் சொன்னது போல பைலில் அரேஞ் செய்து சிலதையும், மற்றதை பென் ட்ரைவிலும் சேவ் செய்து அவர் முன்பு கொண்டு வந்து வைத்தாள் .
அதை வாங்கியவர் காந்தளை பார்த்து சிரிக்க… “சார் நான் இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரமாவே வீட்டுக்கு கிளம்பட்டுமா?” என்றாள்.
“ஏன் மா … ” என்றார் .
“என்னோட அம்மாவையும், அத்தையையும் என்னோடவே தங்க வெச்சுக்கலாம்னு இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன். இனிக்குதான் அவங்களும் வந்து இருக்காங்க … அவங்களை கூட்டிட்டு போய் பக்கத்துல இருக்குற முக்கியமான இடங்களையும், எங்கே எப்படி போகணும்னும் சொல்லி கொடுக்கணும். ஏன்னா அவங்க ரெண்டு பேருமே இந்த ஊருக்கு புதுசு ” என்றாள்.
” அப்படியா …” என்று யோசித்தவர்.
” நான் கொடுத்த எல்லா வேலையும் முடிச்சுட்டீங்களா ?” என்றார்.
“முடிச்சுட்டேன் சார் ” என்றவள் அவர் முன்பு இருந்த பையில்ஸ்களை காட்டி இது எல்லாம் நான் வராத இந்த ரெண்டு நாளோட பெண்டிங் ஒர்க்ஸ் முடிச்சது. அப்பறோம் இந்த பென்ரிவில் நீங்க கேட்ட மாதிரி சில சாம்பிள் டிசைன்ஸ் ரெடி பண்ணி அதை இதுல காப்பி பண்ணி வெச்சிருக்கேன். நீங்க ஒருவாட்டி பார்த்துட்டு ஆஃப்ரொவால் கொடுத்தா போதும் ” என்றாள்.
” சரிம்மா அப்போ பெண்டிங் முடிச்ச பைல்ஸ்களை எல்லாம் நான் நாளைக்கு பாத்துக்கிறேன் . இப்போ நீ செஞ்சு கொடுத்த டிசைனை செக் பங்கிட்டு சொல்றேன் அதில் ஏதும் சேஞ்சஸ் மட்டும் இருந்தா சொல்றேன் அதை மட்டும் ரெடி பனிகொடுத்துட்டு கிளம்பிக்கொங்க ” என்றார்.
அவர் சொன்னதை கேட்டதும் காந்தள் யோசனையாக அவரை பார்க்க…” ஏன் மா .. என்ன ஆச்சு ” என்றார்.
” சார் இந்த ஒர்க்கையும் நான் நாளைக்கு செய்து கொடுக்கட்டுமா ?” என்றால் தயக்கமாக . காந்தளுக்கு தன் அம்மாவையும் , அத்தையையும் தனியே அதுவும் எதுவுமே சொல்லாமல் விட்டு வந்துவிட்டோம் அவர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்களோ என்று யோசனையில் அவள் இருக்க…
நீலகண்டன் அவளை வேலை செய்ய சொன்னதும் என்ன செய்வது என்று அவளுக்கு புரியவில்லை .
அவள் தயங்குவதை புரிந்துகொண்ட நீலகண்டன் “நீங்க வீட்டுக்கு போறேன்னு சொல்ற காரணம் புரியுது எனக்கு… ஆனா நாளைக்கு நம்ம ceo பாரிஸ்ல இருந்து திரும்பி வராரு. அவர் வந்ததும் இந்த ப்ராஜெக்ட்டுக்கான டிசைனை தான் முதல்ல கேட்டிருக்காரு அதான் கொஞ்சம் யோசிக்கிறேன்” என்றவர்.
பின் காந்தளை பார்த்து “ஒண்ணு பண்றீங்களா காந்தள். இந்த டிசைனை நான் செக் பண்ணிட்டு சொல்றேன். நீங்க இன்னிக்கு இதை முடிச்சு கொடுத்துட்டு கிளம்பிருங்க ஒரு வேலை ஒர்க் முடிய லேட் ஆகிருச்சுன்னா… நீங்க நாளைக்கு லீவ் எடுத்துக்கோங்க உங்க அம்மா கூட டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு நெஸ்ட் டே வந்திருங்க” என்றார்
அவர் சொன்னதை கேட்டு சிறிது யோசித்தவள் “எப்படியும் நாளைக்கு ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு போகணும் நாளைக்கும் இவருகிட்டே வந்து பெர்மிஸ்ஸன் கேட்டு தான் ஆகணும் அதுக்கு பேசாம இன்னிக்கு வேலை எல்லாம் முடிச்சி கொடுத்திட்டு நாளைக்கு பேசாம லீவ் போட்டுறலாம்” என்று நினைத்தவள் “ஓகே சார் அப்போ nan ஒர்க் பினிஷ் பண்ணி கொடுத்துட்டே போறேன்” என்றாள்.
அவரும் “ஓகே காந்தள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க உங்க டிசைன்ஸ் பாத்துட்டு சொல்றேன்” என்றவர் அவளை வெளியே அனுப்பி வைத்தார். வெளியே வந்த காந்தள் தன் கேபினுக்கு வர… அவளுக்கு மதிமாறன் போன் செய்து இருந்தான்.
போனை அட்டென்ட் செய்தவள் “ சொல்லு மதி என்றாள் .
“ஈவினிங் ப்ரீயா இருக்கியா காந்தள். நம்ம ரெண்டு பேரும் ஷாப்பிங் போகலாம் நாளைக்கு பர்த்டே பார்ட்டிக்கு கொஞ்சம் திங்ஸ் எல்லாம் வாங்க வேண்டி இருக்கு.. நீயும் வந்தேன்னா உன்ன கூட்டிட்டு ஆபீஸ் முடிஞ்சதும் போலாம்னு நெனச்சேன்” என்றான் மதி .
“சாரி மதி எனக்கு அர்ஜென்ட் வொர்க் இருக்கு இன்னைக்கு என்னால வர முடியாது” என்றாள் .
“அப்படியா கொஞ்சம் லேட் ஆனாலும் பரவாயில்லை நான் வேணா வெயிட் பண்ணி உன்ன கூட்டிட்டு போறேன்” என்றான் மதி .
” இல்ல மதி என்னோட நியூ ப்ராஜெக்ட் பத்தின டீடெயில்ஸ் சார் இப்பதான் பாத்துட்டு இருக்காரு அவர் பார்த்து கரெக்ஷன் சொன்ன பிறகு அந்த வேலையை ஃபுல்லா இன்னிக்கு முடிச்சு குடுத்துட்டு தான் போகணும்னு சொல்லிட்டாரு, நாளைக்கு நம்ம பாஸ் மிஸ்டர் இளன் பாரிஸில் இருந்து திரும்பி வரப்போறதா சொன்னார். அவர் வரதுக்குள்ள இந்த ஒர்க்க முடிச்சு கொடுக்க சொல்லி சொல்லி இருக்காரு. அந்த ஒர்க்கெல்லாம் முடிச்சுட்டு நான் எத்தனை மணிக்கு கிளம்புவேன்னு எனக்கு தெரியாது. அதனால நீ என்ன எதிர்பார்க்க வேண்டாம் . இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ப்ளீஸ்..” என்று காந்தள் கூற..
“ஏய் ஓகே.. ஓகே .. அப்போ நீ உன்னோட வொர்க் பாரு . நான் திங்ஸ் வாங்கிட்டு வீட்டுக்கு கிளம்புறேன். நாளைக்கு சீக்கிரமே அம்மாவையும் அத்தையும் கூட்டிட்டு பார்ட்டி நடக்கிற இடத்துக்கு வந்துடனும் சரியா’ என்றவன் .
“நாளைக்கு நம்மளோட வாழ்க்கையில முக்கியமான நாள். அது நல்ல முறையில் நடக்கணும்னு நான் எதிர்பார்க்கிறேன். சோ லாஸ்ட் மினிட்ல கிளம்பி வராத கொஞ்சம் முன்னாடியே கிளம்பி வந்துடு” என்றான் .
“இதை நீ எனக்கு சொல்லனுமா மதி, நாளைக்கு எவ்வளவு முக்கியமான நாள்னு எனக்கும் தெரியும். கண்டிப்பா நான் வந்து விடுவேன்” என்றவள் ஃபோனை வைக்க நீலகண்டன் அவளை அழைக்கவும் சரியாக இருந்தது.
அவர் கொடுத்த வேலையை வாங்கி முழுவதுமாக முடித்துவிட்டு வீட்டிற்கு காந்தள் செல்வதற்கு இரவு ஆகிவிட்டது .
மிகவும் களைப்போடு வந்த தன் மகளுக்கு கதவை திறந்து விட்ட சித்ரா அவள் சோர்ந்து போய் வாசலில் நின்றிருப்பதை பார்த்ததும் “டெய்லியும் இப்படித்தான் லேட்டா வீட்டுக்கு வருவியா டி பாரு எவ்வளவு டயர்டா இருக்க உன்னை பார்க்கவே ரொம்ப பாவமா இருக்கு இதுக்கப்புறம் வந்து நீ எப்படி சமைச்சு சாப்பிட்டு தூங்குவது” என்று கேள்வி கேட்டுக் கொண்டே அவளை உள்ளே அழைத்தார்.
“அம்மா எல்லா நாளும் இப்படி இருக்காது ஏதாவது அவசரமான வேலை முக்கியமான வேலை அப்படிங்கிறப்ப தான் இந்த மாதிரி லேட் ஆகும் மத்தபடி நான் சீக்கிரமே வீட்டுக்கு வந்துவிடுவேன்” என்றவள் வீட்டிற்குள் நுழைந்தடதுமே உணவின் மனம் அவள் நாசியை துலைக்க..
சித்ராவை திரும்பிப் பார்த்து “இன்னைக்கு என்ன சமையல் தூக்கலா இருக்கு நீங்களே எல்லாமே செஞ்சிட்டீங்களா சமையல் செய்ய எல்லாம் வாங்க என்ன பண்ணுனீங்க. நீங்களும் அத்தையும் பக்கத்துல கடைக்கு எதுவும் போனீங்களா ?” என கேட்டாள் ஆர்வமாக .
“நாங்க காலையில வீட்டுக்குள்ள வந்தது தான் வீட்டை விட்டு வெளியே போய் போகல பிரியா ஏற்கனவே சமையலுக்கு வேண்டியது எல்லாம் வாங்கி வெச்சிருக்கிறதா என்கிட்ட சொல்லிட்டு தான் போனா அதனாலதான் இங்க இருக்குற பொருளை வைத்து நானும் உன் அம்மாவும் சமையல் செஞ்சோம்” என்றார் பத்மா.
வழக்கம் போல மூவரும் சேர்ந்து சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேரம் டிவி பார்த்துவிட்டு தூங்கப் போகையில் காந்தள் நாளை மதியின் பிறந்தநாள் கொண்டாட்டம் இருப்பதால் அதில் மூவரையும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று சொன்னவள்.
” நாளைக்கு நான் ஆபீஸ்க்கு லீவ் போட்டு இருக்கேன் மா… காலையில நம்ம எல்லாரும் வெளியே போய் சாப்பிட்டு ஷாப்பிங் எல்லாம் முடிச்சுட்டு மதியோட பர்த்டேக்கு கிப்ட் வாங்கிட்டு வந்துருவோம்” என்றவள் தன்னறைக்கு உறங்கச் சென்றாள் .
மறுநாள் சொன்னது போல ஷாப்பிங் எல்லாம் முடித்துவிட்டு மதியத்திற்கு மேல் வந்தவர்கள் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கிளம்பி சென்றனர்
பார்ட்டி நடந்த இடத்திற்கு கேபிள் வந்து இறங்கிய காந்தள் , சித்ரா , பத்மா மூவரும் அந்த இடத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர் .
ஏனென்றால் மதி பார்ட்டி நடப்பதாக சொன்ன இடம் சிட்டியிலயே மிகவும் பிரபலமான வசதியை படைத்தவர்கள் வந்து செல்லும் இடமாகும் . உன்னோடு சாதாரண வேலை பார்க்கும் மதியால் இவ்வளவு பெரிய இடத்தில் எப்படி பார்ட்டி வைக்க முடியும் என்று ஆச்சரியத்தோடு உள்ளே நுழைந்தாள் காந்தள் .
அவள் உள்ளே வரும் பொழுதே மதி காந்தளையும் மற்றவர்களையும் பார்த்துவிட அவள் அவர்களிடம் வந்து மூவரையும் வரவேற்றவன் காந்தளையும் சித்ரா பத்மா இருவரையும் அழைத்துக் கொண்டு போய் தன்னுடைய குடும்பத்தார் முன்னிலையில் நிறுத்தி அவர்களிடம் அறிமுகப்படுத்தினான் .
அங்கே காந்தளை பார்த்த மதியின் அம்மா அவள் அருகில் வந்து “நீதான் என் பையன வளச்சு போட்டவளா?” என்று அவளை கீழிருந்து மேலாக ஒரு மார்க்கமாக பார்த்து நேரடியாக கேட்டார் .
சிரித்த முகமாக அவரை பார்த்துக் கொண்டிருந்த காந்தளும் சித்ரா பத்மா மூவரமே மதியின் அம்மாவின் இந்த கேள்வியில் முகம் சிறுத்துப் போயினர்.
அவளை பார்த்துவிட்டு அவள் பின்னால் நின்றிருந்த சித்ரா பத்மா இருவரையும் பார்த்தவர் முகத்தை சுழித்துக் கொண்டு “இவங்க தான் உன் குடும்பத்த ஆளுங்களா?” என்றார் .
“அம்மா என்ன இது உங்க கிட்ட நான் எவ்வளவு முறை சொன்னேன் இந்த மாதிரி எல்லாம் பேசாதீங்க நடந்துக்காதீங்கன்னு எனக்கு காந்தளை புடிச்சிருக்கு நான் இவ்வளவு தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.இதனால் தெளிவாக உங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் . முதல் முறையார் அவளை பார்த்ததும் இப்படித்தான் பேசி காந்தளையும் வீட்ல இருக்கறவங்களையும் கஷ்டப்படுத்துவீங்களா?” என்றவன் காந்தளிடம் திரும்பி “சாரி காந்தள் என் அம்மா பேசுவதற்காக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என்றான் .
“டேய் நான் வேணும்னா அப்படி பேசினேன் . சும்மா அப்படி பேசினா என் மருமகளுக்கு கோபம் எதுவும் வருதா என் கூட சண்டை போடுவாளான்னு பார்த்தேன். ஆனா இவ ரொம்ப நல்ல பொண்ணா தான்டா இருக்கா… வாயவே திறக்காமல் எவ்வளவு அமைதியா இருக்கா பாரு” என்று சிரித்த மதியின் அம்மா . காந்தளின் கைபிடித்து “வாம்மா நான் சும்மா உன்ன டெஸ்ட் பண்ணிப் பார்க்க தான் அப்படி பேசினேன்” என்றவர் காந்தளின் அம்மாவையும் பத்மாவையும் பார்த்து “உள்ள வாங்க..” என்று தன்னோடு அவர்களை அழைத்துச் சென்றார்.
அவர் பேசியதுமே காந்தலுக்கும் சித்ரா பத்மாவிற்கும் உண்மையில் மனது மிகவும் சங்கடமாகத்தான் இருந்தது ஆனால் அவர் உடனே இப்படி மாற்றி பேசவும் அவருடைய உண்மையான குணம் தெரியாமல் மூவரும் சிறிது தயக்கத்தோடு தான் பார்ட்டிக்குள் நுழைந்தனர்.
காந்த அலை தன் அம்மாவிடம் விட்டுவிட்டு பார்ட்டிக்கு வந்த மற்றவர்களை கவனிக்க சென்று விட்டான் மதி அவன் சென்றிருந்த நேரத்தில் மதியின் அம்மா காந்தளிடமும் சித்ரா பத்மாவிடமும் பேசிக்கொண்டு இருக்க அவர் ஒவ்வொரு முறையும் தங்களை குத்தி காட்டி ஏதாவது பேசுவதுமாகவும் மதியில்லாத போது பேசுவதை கேட்டுக்கொண்டு மூவராலும் அங்கு இருக்க முடியவில்லை .
காந்தளை தனியாக அழைத்த பத்மா “அம்மு நம்ம இங்க இருக்க வேண்டாம் இந்த அம்மா பேச்சு சரியில்ல அவங்க பையன் வேணா நல்ல பையனா இருக்கலாம் அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ண விருப்பம் இருக்கலாம் ஆனால் இந்த அம்மா பேசுவதை பார்த்தால் உனக்கும் மதிப்பும் கல்யாணம் பண்ண விருப்பம் இல்லாதது போல தோணுது இங்க இருந்தா நமக்கு தான் அவமானம் பேசாம நம்ம கிளம்பி வீட்டுக்கு போகலாமா” என்றார் அவரோடும் நின்றிருந்த சித்ராவும் இடைத்தல் சொல்ல நினைத்தார் .
“அம்மா பர்த் டே பாட்டிக்கு வந்துட்டு திடீர்னு கிளம்பி போனா மதி ஏதாவது நினைச்சுக்குவான் . கொஞ்ச நேரம் பொறுங்க பார்ட்டி முடிந்ததும் முதல் வேலையா நம்ம கிளம்பிடலாம்” என்றவள் அந்த நேரம் பிரியாவும் முகுந்த்தும் அங்கே வர அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டாள் .
