News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

போதையடி நீ எனக்கு 2.23

by Sinamika Writes
363 views
A+A-
Reset

EPISODE 23

ஆஃபிஸில் உள்ளவர்கள் எல்லாம் அவளை பற்றி தப்பாக பேசியது கேட்டு ஏதொ ஒரு டென்ஷனில் பேசியதை பிடித்துக்கொண்டு இப்பொது தன்னை பழி வாங்கும் மாறனை பார்த்து கோபமாக முறைத்தவள் “எனக்கு  உங்க பெர்சனல் வேலை தெரிஞ்சுக்கணும்னு என்ன அவசியமும் இல்லை . சாரி சார் இவ்ளோ நேரம் இங்கே நின்னு உங்க டைமை வேஸ்ட் பண்ணினத்துக்கு ” என்றவள் வெடுக்கென முகத்தை திருப்பிக்கொண்டு அவன் கேபினை விட்டு வெளியேறி இருந்தாள் .

அதை எல்லாம் பார்த்த மதிக்கும் , வசுந்த்ராவிற்கும் ஒன்றும் புரியவில்லை .

மாறனோ கோபமாகி செல்லும் தன் முயல்குட்டியை நினைத்து உள்ளுக்குள் சிரித்தவன் “ம்ம் … சொல்லுங்க பாட்டி என்ன விஷயம் ” என்றான்.

“டேய் மாறா என்ன இது எதுக்காக இப்போ காந்தளை அனுப்பி வச்ச.. அவளும் நம்ம வீட்ல ஒருத்தி தானே அவகிட்ட போய் இப்படி பேசுற.. அவ கோச்சுக்க போறா போய் அவளை கூப்பிடு  முதலில்” என்று வசுந்தரா கூற…

“பாட்டி  அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை . அவளை நான் பார்த்துக்கிறேன் அவளுக்கு வேற ஒரு கோபம் என் மேல. அதனாலதான் நான் சொன்னதும் அவளும் கோவிச்சுட்டு கிளம்பி போயிட்டா. நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க” என்றான் மாறன் .

“என்னடா இது..” என்று  சலித்துக்கொண்ட வசுந்தரா அவர் அருகில் நின்றிருந்த மதியை பார்த்து “இவன் இருக்கானே இவனோட பெரிய தொந்தரவா போயிடுச்சு” என்றவர் . அடுத்து பேச வர அப்போது மாறனின் அறைக்கதவை யாரோ வெளியில் இருந்து   தட்டினார்கள் .

“பாட்டி ஒன் மினிட்” என்றவன் “எஸ்..’ என்றான்  வாசலை பார்த்து.

கோபமாக வெளியே சென்றிருந்த காந்தள்  அவன் அறைக் கதவை  திறந்து கொண்டு  உள்ளே நுழைந்தாள்  . டக்…டக்  என்று பின் ஹில்ஸ்  ஷூ அணிந்த காந்தள்  ஸ்டைலாக நடந்து வரும்  சத்தம் அந்த அறையில் எதிரொளித்த வண்ணம் அவர்கள் அருகில் வந்தவள்.” ஹலோ பாட்டி..”  என்று அவரை இப்போதுதான் பார்த்தது போல கை காட்டிவிட்டு மாறனை பார்த்து “என்ன மாறா பாட்டி உன்னை பார்க்க வந்திருக்காங்க  எதுவும்  முக்கியமான விஷயமா?” என்றாள்

“ஆமா காந்தள் இவன் பேசியதை கேட்டு நீ எதுவும் கோவிச்சுட்டு போயிடுவியோனு நினைச்சேன். நல்ல வேலை திரும்ப வந்துட்ட வா இப்படி வந்து உட்காரு . நீயும் இருந்தா இதை பேச எனக்கு கொஞ்சம் சவுரியமா இருக்கும்னு  நினைக்கிறேன். அப்புறம் இந்த பாட்டியை யாரும் குற்றம் சொல்லக்கூடாது இல்லையா ” என்று அவள்  கைபிடித்து தன் அருகில் இருந்த  சேரில்  அமர வைக்கப் போக …

” பாட்டி என்ன நீங்க வந்ததுல இருந்து என் கொழுந்தனாரு நின்னுட்டு இருக்காரு அவர உட்காரச் சொல்லாமல் என்னை உட்கார சொல்லி இருக்கீங்க. இது என் புருஷனோட ஆபிஸ்  நான் அவர் பக்கத்துல போய்  உட்காருறேன்” என்று நடந்து சென்று மாறன் அமர்ந்திருந்த சேரில் அவன் கைப்பிடியில் வைத்திருந்த மாறனின் கையை எடுத்துவிட்டு அதில் அமர்ந்தவள் மதியை பார்த்து “என்ன  கொழுந்தனாரே நின்னுட்டு இருக்கீங்க உக்காருங்க”  என்றாள்   நக்கலாக .

மதியிடம் காந்தள்  பேசியதை பார்த்து அவனுக்கு கடுப்பாகத்தான் இருந்தது . இருந்தும் இப்போதைக்கு அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சென்று வசுந்தராவின் அருகில் இருந்த சாரி அமர ..

சற்று நேரத்திற்கு முன்பு ஆபீஸ் ஸ்டாப்  அப்படி இப்படி என்று பேசியது இப்போது அவளாகவே வந்து  மாறனின் மனைவியாக உரிமை கொண்டாடியபடி அவன் சேரில்  உரசிக் கொண்டு அமர்ந்து இருந்தவர்களை பார்த்தவன்  “சரியா ராங்கிடி நீ ” என்று அவள் காது பட சொல்ல …  

“உன்னை விடவா.. பாட்டி ஏதும் முக்கியமான விஷயம் பேசணும்னு சொல்றாங்க நீ என்ன கிளம்பி போக சொல்ற… நீ வீட்டுக்கு வா உன்ன இன்னைக்கு பட்டினி போடுறேன்” என்று அவனுக்கு மட்டும் கேட்டபடி சொன்னவள் திரும்பி அவர்களுக்கு எதிரில் அமர்ந்திருந்த வசுந்தராவை பார்த்து எதுவும் தெரியாதவள் போல சிரித்தாள்

தன் பேரனிடம் உரிமையாக உரசிக்கொண்டு அமர்ந்திருக்கும் பேத்தியை பார்த்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்ட வசுந்தரா  ” இங்க பாரு மாறா  இவன் பிரச்சனை பெரும் பிரச்சனையா  இருக்கு” என்றார் .

“என்ன பிரச்சனை சொல்லுங்க பாட்டி ” என்றான்   மாறன் .

“அது ஒன்னும் இல்லடா நீ எப்படி இந்த கம்பெனில  இருக்கியோ.. அதேபோல இவனும் இனிமேல் நம்ம குடும்ப வாரிசா தான் இந்த கம்பெனிக்குள்ள வருவேன்னு சொல்றேன். அதாவது இப்போ இவன் பாத்துட்டு இருக்குற வேலையை இனிமேல்  செய்யப் போறது இல்லையாம். அவனும் உன்ன மாதிரியே இங்கே எல்லாரையும் வேலை வாங்கி தன்னோட இடத்தை எல்லோருக்கும் புரிய நம்ம  டிசைனிங் டீம் ஓட ஹெட் ஆஹ் இவன ப்ரோமிட் பண்ண சொல்லி கேக்குறான்” என்றார்

அதைக் கேட்ட மாறன்   தன்  எதிரே அமர்ந்திருந்த மதியை பார்த்து   “மதி இங்கே இருக்கிறவங்கள வேலை வாங்குற திறமையும். தகுதியும் உனக்கு இருக்குன்னு நீ நினைக்கிறாயா?” என்றான்  மாறன் .

“ஏன் இல்ல உன்ன விட நல்லாவே நான் நிர்வாகம் பண்ணுவேன். என்கிட்ட எந்த பொறுப்பையும் கொடுக்காம என்னால முடியும் முடியாதுன்னு முடிவு பண்ண நீ யாரு ?” என்றான்  மதி .

“நான் அதுக்காக சொல்லல மிதி இங்கே இருக்கிறவங்க வேலை வாங்கணும்னா அதுல நிறைய விஷயங்களை நீயும் தெரிஞ்சி இருக்கணும். அதனால தான் உன்ன ஒன் இயருக்கு நம்ம கம்பெனியில   மற்றவர்களோடு சேர்ந்து உன்னை வேலை பார்க்கச் சொன்னேன் ” என்றான் மாறன் .

” அது  தான்  ஒன் இயர் முடிஞ்சிடுச்சு இல்ல  இன்னும் இந்த ஆபீஸில் மத்தவங்களோட ஒண்ணா வேலை பார்க்கணுமா. அதான் நான் யாருன்னு இங்க இருக்குற எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சு இல்ல . இனி நான் இங்கே மத்தவங்க கூட ஒண்ணா வேலை பார்க்க விருப்பப்படவில்லை அவர்கள் வேலை வாங்க தான் விரும்புகிறேன்” என்றான்.

“அப்படி எடுத்தேன் கவுத்தென்ன்னு  உன்னை ஒரு பெரிய பதவியில உட்கார வைக்க முடியாது மதி. பாட்டி சொன்ன மாதிரி உன்ன ப்ரூப் பண்ணாம எப்படி நான் உனக்கு அவ்வளவு பெரிய போஸ்ட் கொடுக்க முடியும்”  என்றான் மாறன் .

“என்ன ஆளாளுக்கு சொல்றீங்களே நான் என்ன செய்தால் நீங்க என்ன நம்பி இந்த பொறுப்பை ஒப்படைப்பிங்க அதை சொல்லுங்க. நான் சொல்ற வேலையை செய்து காட்டி என்னுடைய இடத்தை உங்களுக்கு புரிய வைக்கிறேன்” என்றான் .

“என்னடா  திடீர்னு வந்து வேலையை கொடுங்க செய்கிறேன்னு சொன்னா அவன் என்ன பண்ணுவான்” என்று வசுந்தரா கேட்க .

” பாட்டி நீங்க ஏன் டென்ஷன் ஆகுறீங்க. இப்ப என்ன என்னோட கொழுந்தனார் அவர் கேட்கிற போஸ்டிங்க கொடுக்கறதுக்கு அவர்  தகுதியானவரான நம்ம எல்லாருக்கும் தெரியணும்னா  அவர் சொன்னது போல அவருக்கு நம்ம ஒரு டாஸ்க் கொடுப்போம் அந்த டாஸ்க் அவர் சரியா செய்து முடித்துவிட்டால் அவர் கேட்ட போஸ்டிங்க அவருக்கு கொடுத்துடலாமே” என்றாள் காந்தள்  .

தன் அருகில் அமர்ந்திருந்தவளை   திரும்பிப் பார்த்த மாறன்  “அப்போ அந்த டாஸ்க் என்னன்னு நீயே சொல்லிடு.. கண்டிப்பா நீ யோசிச்சிறுப்பேன்னு எனக்கு தெரியும்” என்றான்  மாறன் .

” பாட்டி எந்த வேலையா இருந்தாலும் நீயும், மாறனும் கொடுங்க நேத்திக்கு வந்தவெல்லாம் எனக்கு டாஸ்க் கொடுக்கிற அளவுக்கு பெரிய ஆள் கிடையாது .  முதல்ல  எனக்கு இந்த வேலையை சொல்ல அவளுக்கு என்ன தகுதி இருக்கு ” என்றான்  மதி .

“மதி வார்த்தையை அளந்து பேசு அவ என்னோட வைஃப். உனக்கு அண்ணி வேணும் அவ… அந்த ஒரு தகுதி போதாதா அவ உன்னிடம் வேலை சொல்ல” என்றவன் “காந்தள்  என்ன வேலை சொல்றாளோ அதை நீ செய்து முடிச்சா தான் நீ கேட்டது நடக்கும் ” என்றான்  உறுதியாக .

மாறன் பேசியது கேட்டு கடுப்பான மதி  காந்தளை  பார்க்க அவளோ கையை கட்டிக்கொண்டு அவனை பார்த்து சிரித்தவள் புருவம் உயர்த்தி எப்படி  என்றாள்  தெனாவட்டாக .


மதி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க “மாறன் நம்ம ராணி மேம் டீமும், நீலகண்டன் சாரோட டீமையும் சேர்ந்து இப்போ புதுசா அந்த சைல்ட் ப்ராடக்ட் டெவலப்மெண்ட்காக   எடுக்கப் போற விளம்பர படத்துக்கு புது ப்ராஜெக்ட் ஐடியாஸ் கொடுக்கிறேன்ன்னு சொல்லி இருக்காங்க. அது உனக்கு ஞாபகம் இருக்கா? நீ கூட அந்த ரெண்டு டீம்ல யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்கள சுவிட்சர்லாந்துக்கு  டீம்மோட அனுப்பி வைக்கிறேன்னு சொன்னியே அந்த ப்ராஜெக்ட்” என்றாள்  காந்தள்.

“ஞாபகம் இருக்கு காதல் அந்த வேலைக்காக தான் நம்ம ரெண்டு டீமும் தீவிரமா வேலை பாத்துட்டு இருக்காங்க” என்றான்  மாறன் .

“ம்ம்ம்… அதேதான் அந்த ப்ராஜெக்ட்ட மதியையும் எடுத்து செய்யச் சொல்லு இந்த மூணு டீம்ல யாரோட டீம் பெஸ்ட்டா இருக்கோ அவங்கள நம்ம  டிசைனிங் டீம்மோட ஹெட்டா ப்ரமோட் பண்ணலாம். அதே போல  அந்த ப்ராஜெக்ட் நல்லபடியா செஞ்சு முடிச்ச அந்த டீமை நீ சொன்னது போல சுவிட்சர்லாந்தும் அனுப்பி வைக்கலாம்” என்றாள் .

அவள் சொன்ன ஐடியா மாறனுக்கு சரி என்று பட வசுந்தராவை பார்க்க தான் பெரிய பிரச்சனை என்று நினைத்துக் கொண்டிருந்த விஷயத்தை காந்தள்  இவ்வளவு சாதாரணமாக முடித்து வைத்ததை பார்த்து சந்தோஷம் அடைந்த வசுந்தரா திருப்தியாக மாறனை பார்த்து தலையாட்ட …

“காந்தள்  சொன்னத கேட்டுக்கிட்டியா மதி. இதுதான் உன்னோட டாஸ்க்.. நீலகண்டன் டீமையும் ராணி டீமையும் நீ பின்னுக்கு தள்ளிட்டு உன்னோட  திறமையை பயன்படுத்தி சில்ட்ரன் லைட் அவங்க ப்ராடக்ட் ப்ரமோட் பண்ண நமக்கு அவங்க ஓகே சொல்லிட்டாங்கனா நீ கேட்டது என்ன அதுக்கு மேலையே நான் உனக்கு செய்கிறேன்” என்றான் மாறன் .

“ப்பூ…. இவ்ளோதானா நான் கூட ஏதோ பெரிய டாஸ்க் கொடுப்பீங்கன்னு இல்ல நினைச்சேன். இது  ஒரு விஷயமே எனக்கு கிடையாது.  இந்த டாஸ்க் செய்ய நான் தயாராத்தான் இருக்கேன். அதுக்கு  நான் ஒரு டீமை ஃபார்ம் பண்ணலாமே நினைக்கிறேன். அந்த டீமுக்கு நான் நம் ஆஃபீஸ்ல இருந்து யார வேணா செலக்ட் பண்ணிக்கிற அத்தாரிட்டி எனக்கு இருக்கு தானே” என்றான் மதி .

“அப்கோர்ஸ் மதி உனக்கு யாரை உன்னோட டீம்ல வேலைக்கு சேர்க்கணுமோ அவங்கள சேர்த்துக்கோ அதுக்கு நான் அப்ஜெக்ட் பண்ணுவேனா என்ன” என்றான் .

 “அப்போ பேச்சு மாற மாட்டியே மாறா” என்றான் மதி .

“இதுல பேச்சு மாறி என்ன இருக்கு மதி. நீ ஒரு நல்ல விஷயம் செய்ற அதுக்கு கண்டிப்பா நான் உனக்கு சப்போர்ட் பண்ணுவேன்” என்றவன் “உனக்கு யாரை உன்னோட டீம்ல ஆட் பண்ணனும்னு நினைக்கிறாயோ அவங்கள கூப்பிட்டுக்கோ எனக்கு எந்த பிராப்ளமும் இல்லை” என்றான்  மாறன் .

“அப்போ என்னோட டீம்ல என் கூட சேர்ந்து அந்த  ப்ராஜெக்ட்ட திறமையா செய்யக்கூடிய ஒரு ஆள்  காந்தள்தான் என் கூட இந்த டீம்ல என்னோட அசிஸ்டன்டா நான் காந்தள எடுக்கலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்ற” என்றான் மாறனிடம் .

அதைக் கேட்டதும் காந்தளுக்கு ஷாக்கானது “எவ்வளவு தைரியம் இருந்தா என்ன அவன் கூட வேலை பார்க்க திரும்ப கூப்பிடுவான் என்ன பத்தி என்ன நினைச்சுட்டு இருக்கான்” என்று காந்தளுக்கு அவனை நினைத்து கோபமாக வர …

தன்னைவிட மாறனும் கோபமாகத்தான் இருப்பான் அவன் கண்டிப்பாக மதி கேட்ட விஷயத்திற்கு சம்மதம் சொல்ல மாட்டான் என்று நம்பியவள் மாறனை பார்க்க ..

அதற்குள் மாறன்  “ஓகே எனக்கு காந்தள்  உன்கிட்ட வேலை பாக்குறதுல எந்த பிரச்சனையும் இல்ல. நீ நினைச்சது போல இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் புல்லா முடிஞ்சா எல்லாரையும் விட நான் தான் அதிகமா சந்தோஷப்படுவேன்” என்றான் மாறன் .

மாறனின் பதிலில் மதி சந்தோஷம் அடைந்தவன் திரும்பி காந்தலை பார்க்க …

அதே மாறனின் பதிலால் அதிருப்தி அடைந்த காந்தளோ  ஏமாந்த முகத்தோடு மாறனை பார்த்துக் கொண்டிருந்தாள் .

” சரிப்பா எப்படியோ நான் வந்த வேலை நல்லபடியா முடிஞ்சிருச்சு. அம்மாடி எப்படியாவது இவன் கூட இருந்து இந்த அறிவு கெட்டவனுக்கு கொஞ்சம் புத்தி சொல்லி நல்லபடியா வேலை வாங்க பாருமா . இவனுக்கும் பொறுப்பு வந்து  மாறன் மாதிரி நம்ம கம்பெனியை நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தா நான் சந்தோஷப்படுவேன்” என்றவர் “சரி வாடா போகலாம்” என்று  மதியை தன்னோடு அழைத்துக் கொண்டு அங்கிருந்து செல்ல…

அவர்கள் சென்ற மறுநொடி சாரிலிருந்து எழுந்தவுடன் திரும்பி மாறனிடம்  “என்ன கேட்காம நீங்க இப்படி அவனோட டீம்ல என்ன ஒர்க் பண்ண சம்மதம் சொல்வ.. எனக்கு அதுல விருப்பம் இருக்கா? இல்லையான்னு ஒரு வாட்டி கூட என்கிட்ட கேட்கணும்னு தோணலையா? உங்களுக்கு” என்று  மாறனிடம் கோபமாக பேசினால் காந்தள் .

“நான் எதுக்காக உன்கிட்ட சம்மதம் கேட்கணும்”என்ற மாறனின் பதிலால் உறைந்து போய் அவனை பார்த்தாள்  காந்தள்

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.