News
🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥 🎉 லயாஸ் தமிழ் நாவல்களுக்கு அன்புடன் வரவேற்கிறோம்! 📖 புதிய அத்தியாயங்கள் தினமும் வெளியாகும் ✨🔥

இராக்கதனின் ரதி அவள் part-1-5

by Layas Tamil Novel
411 views
A+A-
Reset

EPISODE 5

ரதியை தூக்கிக்கொண்டு சிறிது தூரம் சென்றவன் . ரதி அவன் தோளில் இருந்து இறங்க துள்ளிக்கொண்டு இருந்தாள்.  அதில் கடுப்பான ராக்கி “ஏய் 250 பீடா அமைதியா வந்தேன்னா என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு உன்னை அனுப்பி வெச்சிடுவேன். இல்ல… இங்க இருந்து  தப்பிக்கிறேன் அதை பண்ணுறேன் இதைப் பண்றேன்னு ஏதாவது வம்பு பண்ண.. இங்கேயே உன்னை குழி தோண்டி புதைச்சிருவேன்” என்று ரதியை கீழே இறக்கிவிட்டவன்.

“இந்த இடத்தை சுத்தி பாரு எப்படி இருக்குன்னு” என்று சொல்லி  ராக்கி ரதியை மிரட்ட..

அப்போது தான் அந்த இடத்தை சுற்றிலும் நோட்டம் விட்டால் ரதி. அது ஒரு ஆள் அரவமற்ற கைவிடப்பட்ட ஒரு பெரிய தொழிற்சாலை போல இருந்தது. இவர்களை தவிர அந்த இடத்தில் யாருமே இல்லை …  அந்த இடத்தை சுற்றிலும் நீண்ட தூரத்திற்கு எந்த ஒரு வீடோ கட்டிடமோ அல்லது சாலையோ கூட அவள் கண்ணுக்கு தென்படவில்லை. அதை பார்த்ததும் விட்டுட்டு போனால் நெஞ்சுக்கூடு வேகமாக ஏறி இறங்கியது பதட்டத்தில் கண்கள் பட பட என அடித்துக் கொண்டது வேக மூச்சு எடுக்க ராக்கிய பார்த்தாள் .

“பார்க்க 250 பீடா மாதிரி இருந்துட்டு என்ன துள்ளு துள்ளுற நீ… என்ன புரிஞ்சுதா.. ஒழுங்கா சேட்டை இருக்கனும் சரியா .. ”  என்றான். அதற்கு அவள் தலை தானாகவே சரி என்று ஆடியது. 

” ராக்கி நீ இவள பாத்துக்க நான் போய் அவனை தூக்கிட்டு வரேன்” என்ற மாரீஸ், வாங்கடா என்று தன்னோடு வந்த மற்ற இருவரை அழைத்துக் கொண்டு காரை நோக்கிச் செல்ல…

“யார் கூட்டிட்டு வரேன்னு  சொல்றாங்க” என்று அவர்கள் சென்ற திசையை தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ரதி . அதற்குள்ளாக அவளை பின்னிருந்து கழுத்தில் கை  போட்டு  அந்த கட்டிடத்திற்குள் ராக்கி  ரதியை இழுத்துக்கொண்டு செல்ல… அவன் இழுப்பிற்கு ஈடு கொடுத்து ரதியும் சென்றாள் .

 உள்ளே வந்த ராக்கி அவள் வாயில் கட்டி இருந்த கரசிப்பை   எடுத்துவிட்டவன் “சொல்லு அந்த இடத்துக்கு நீ எதுக்காக வந்த.. எதுக்கு எங்க கார் பின்னாடி ஒளிஞ்சிட்டு இருந்த..  ஒழுங்கா உண்மைய சொன்னா இங்கிருந்து நீ உயிரோட எந்த சேதாரமும் இல்லாமல் போலாம். அப்படி இல்ல நீ எதுவும் வேவு பாக்குற வேலையா வந்தேன்னு மட்டும் தெரிஞ்சுது உனக்கு என்ன நடந்தாலும் அதற்கு நீ தான் பொறுப்பு புரிஞ்சுதா ” என்று ரதியை அதட்ட…

இவ்வளவு நேரம் வாய்க்குள் கரசிப்பை  வைத்து கட்டி இருக்க அவள் வாய் முழுவதும் வறண்டு போய் இருந்தது.

லொக்…லொக்… என்று இறுமிக் கொண்டே அவனைப் பார்த்தவள்.

“த்…த்…த…தண்ணி… தண்ணி வேணும்” என்றாள்.

அவள் கேட்டதும் “இங்கே வா…” என்று ராக்கி முன்னாள் நடக்க ரதி தயங்கி தயங்கி அவன் பின்னால் சென்றவள். ராக்கி அந்த பாழடைந்த கட்டிடத்திற்குள் இருக்கும் ஒரு அறைக்குள் செல்ல…

அவன் பின்னே செல்லாமல் அங்கேயே நின்றவள்  அந்த அறையின்  உள்ளே என்ன இருக்கிறது என்று நோட்டம் விட்டாள் .

இங்கே ராக்கி அதிக நேரம் செலவழிப்பான் போல அவன் நுழைந்த அறை ஒரு நவீன படுக்கை அறையுடன் கூடிய மற்ற வசதிகளோடு இருக்க அதை பார்த்ததும் ரதிக்கு விக்கல் வர ஆரம்பித்தது .

ஹக்…ஹக்… என்ற சத்தத்தோடு அவள் விக்கி கொண்டிருக்க பின்னால் திரும்பியவன் “கொஞ்சம் முன்ன இருமல் , இப்போ விக்கலா … ” என்றவன் “அங்கே என்ன பண்ணிட்டு இருக்க உள்ள வா…” என்றான்.

ரதி தயங்கிய படி அந்த அறைக்குள் கால் எடுத்து  வைக்க அவள் வந்த மறு நொடி ராக்கி வேகமாக வந்து அவன் அறையை உள் பக்கம் தாளிட்டவன்  

திரும்பி ரதியை பார்க்க…

அவளோ பயந்தவளாக பின்னால் நகர்ந்தபடி “இப்போ…இப்போ எதுக்கு கதவை சாத்துனிங்க .. நா.. நான்… தண்ணி தானே கேட்டேன்” என்றாள் .

“ஆமா தண்ணி தான் கேட்ட… அதுக்கு… குடிச்சிட்டா போகுது  ” என்றவன் “ஆமா  நீ எதுக்கு CM  வீட்டை வேவு பாக்க வந்த… என்ன விஷயமா அங்க வந்த நீ…” என்று ராக்கி ரதியை நெருங்க..

“இங்க பாருங்க.. நான் CM  வீட்டுக்கு வந்தது அவர் வீட்ல என்ன நடக்குதுன்னு வேவு  பார்க்க இல்ல… அதை புரிஞ்சுக்கோங்க… இப்படி என்னை தூக்கிட்டு வந்து ரூமுக்குள்ள விட்டு கதவை சாத்துற வேலை எல்லாம் வேணாம். நான்… நான்.. தினம் கவனி பத்திரிக்கையில் வேலை பாக்குறேன். எனக்கு ஏதாவது ஆச்சுன்னா உங்களை சும்மா விட மாட்டாங்க… ” என்று ராக்கியிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று சுற்றிலும் நோட்டமிட்டபடி பின்னால்  நகர்ந்தாள்.

“ஓ.. நீ தினம் கவனி பத்திரிக்கைக்காரியா … அந்த பத்திரிக்கை ஆளுங்களை  தான் நான் ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன். என்னை யாரோ ஆங்கிள்  ஆங்கிலா  வீடியோ போட்டோன்னு எடுத்து உங்க பத்திரிகையில் போட்டிருக்கிங்க.. ஆமா  அந்த போட்டோவை எல்லாம்  யார் எடுத்தா? நீயா ? ” என்று கேட்டபடி அவளருகில் வந்தான்.

“எ.. எந்த போட்டோ… ” என்றாள்  ரதி புரியாமல்.

“அதுவா… இரு ஒரு நிமிஷம் உனக்கு அந்த போட்டோவையே காட்டுறேன் ” என்று தன் பாக்கெட்டில் இருந்த  போனை எடுத்தான் ராக்கி.

அவன் போனை எடுத்த நேரம் ரதி வேகமாக அவனை தாண்டி ஓடிச் சென்று கதவை திறக்க போக…

“அட ! 250 பீடா.. என்ன அதுக்குள்ள அவசரம் . இரு இந்த் போட்டோவை பாரு ” என்று அவள் கையை பிடித்து கதவருகில் நின்றவளை இழுத்துக்கொண்டு கட்டிலை நோக்கி நடந்தவன் தான் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவன் கால்களுக்கு இடையில் ரதியை நிறுத்திவிட்டு அவளை அங்கிருந்து போகவிடாமல் கால்களை மெட்டி பிடித்துக்கொண்டவன் .

சில நாட்களுக்கு முன்னாள் தினம் கவனியில்  வெளியான ராக்கியின் புகைப்படத்தை எடுத்து அவளிடம் காட்டினான்.

அவனின் நெருக்கத்தில் நெளிந்த ரதி “இங்க பாருங்க என்னை முதல்ல விடுங்க… ஒரு பொண்ணுகிட்ட இப்படி வம்படியா நடந்துக்குறது சரி இல்லை… ” என்று  அவன் கால்களை பிரித்துவிட முயன்றாள் .

“ஓய்!! 250… முதல்ல இந்த போட்டோவை பார்த்து சொல்லு யார் இந்த போட்டோவை எடுத்தாங்கன்னு . அப்போ தான் உன்னை விடுவேன் ” என்றான்.

“நீங்க முதல்ல என்னை  விடுங்க.. நான் பார்த்து சொல்றேன் ” என்று ரதி நெளிய…

அவள் நிலையை உணர்ந்தவன் சட்டென்று தன் கால்களை விலக்கிக்கொள்ள… அவனிடம் இருந்து வேகமாக விலகி நின்றவள். “தயவு செய்து என்ன விடுங்க… ஏற்கனவே இருட்டுற மாதிரி ஆகிருச்சு. என் அம்மாவும், அப்பாவும் தேடுவாங்க ” என்று ராக்கியிடம்  கெஞ்சினாள்.

“அப்போ இந்த போட்டோவை எடுத்தது யாருன்னு சொல்லு.. நான் உன்னை உடனே இங்க இருந்து அனுப்பி வெக்குறேன் ” என்று போனை அவள் முன் காட்ட…

“என்ன இவன் போட்டோவை பாரு போட்டோவை பாருன்னு படுத்துறான். அப்படி என்ன போட்டோ அது ” என்று யோசனையில் எட்டி அவன் நீட்டிய போனில் இருந்த போட்டோவை பார்த்தவள் அதிர்ச்சியானாள் .

அதே அதிர்ச்சியோடு ராக்கியை பார்த்தாள் .

“என்ன இப்படி ஷாக் ஆகுற.. என்னடா நேர்ல பாக்க ரவுடி மாதிரி இருக்கான். ஆனா போட்டோவுல பாக்குறப்போ  அழகா  இருக்கானேன்னு பாக்கறியா?” என்றான் சிரித்துக்கொண்டே.

“அஹ் … ” அவனை பார்த்து விழித்தவள். நாலாபக்கமும் தலையை ஆட்டினாள்.

“சரி விடு இந்த போட்டோவை எடுத்தது யாரு ” என்றான்.

“அது.. அது வந்து.. இந்த போட்டோ… போட்டோ எடுத்தது… ” என்று ரதி தான் எடுத்த போட்டோவை காட்டி யார் இந்த போட்டோவை எடுத்தது என்று கேட்பவனிடம் உண்மையை கூறினாள்  எதுவும் விபரீதம் நடக்குமோ என்று பயத்திலேயே அவனை பார்த்தவளுக்கு. ராக்கியின் உருவமும், அவன் இறுகிய  முகத்தையும் பார்த்து அவள் உடல் தானாக உதறல் எடுக்க ஆரம்பித்தது.

அதை கவனித்தவன் “உன்கிட்டே நான் என்ன கேட்டேன் இந்த் போட்டோவை எடுத்தது யாருன்னு தானே கேக்குறேன் . அதுக்கு ஏன் இப்படி நடுங்குற… “என்று அவளை சந்தேகமாக பார்த்தவன்.

“நீ மழுப்புரத்தை பார்த்தா ஏதோ சரி இல்லாத மாதிரி தோணுது… ” என்று அவளை பார்த்தான்.

“இல்ல.. இல்ல அதெல்லாம் இல்ல… ” என்று அவள் உதடு தந்தி அடித்தது .

“ஏய்.. அப்போ இந்த போட்டோவை நீதான் எடுத்தியா!! ” என்று ராக்கி நம்பமுடியாமல் அவளை பார்க்க..

ம்ஹும்… என்று தலையை இடவலமாக ஆடியவள் கால்கள் தானாக ராக்கியை விட்டு விலகி பின்னால்  சென்றாள் .

கட்டிலில் அமர்ந்து இருந்தவன் எழுந்து அவள் அருகில் வந்தவன் “அப்போ கண்டிப்பா நீதான் இந்த போட்டோவை எடுத்திருக்க… ” என்று ரதியை கையை பிடித்து இழுத்தவன் .

“சும்மா சொல்லக்கூடாது நீ என்னை நல்லா தான் போட்டோ  எடுத்திருக்க.. ” என்றவன் .

“என்னை இந்த அளவுக்கு ரசிச்சு போட்டோ எடுத்திருக்கேன்னா உனக்கு என் மேல எதுவும்… ” என்று ரதியை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

“என்ன இவன் இபப்டி பாக்குறான். கடவுளே.. நான் என்ன  செய்வேன் உன்கிட்டே நான் புலம்புறது எல்லாம்  கேக்குதா இல்லையா ? என்னை ஏன் இந்த ராட்சஷன்கிட்டே  மாட்டிவிட்டு வேடிக்கை பாக்குற,,, ” என்று கடவுளிடம் சண்டையிட்டாள்.

ஆனால்  அவள் வேண்டுதல் கடவுளிடம் சேர்வதற்குள் ரதியை இழுத்து கை  வளைவில் நிப்பாட்டியவன் “நீ அமைதியா இருக்கறதை பார்க்குற அப்போ.. நான் கேட்டது சரி தான்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு… ” என்று அவள் முகத்தை பிடித்தவன் அடுத்த நிமிடம் ரதியின் இதழில் முத்தம் வைக்க துவங்கி இருந்தான்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரதி அதிரிச்சியில் கண்களை அகல விரித்தாள். அவள் கைகள் ரதியின் ஆடையை இறுக பற்றிக்கொண்டது .

ரதியாள்  ராக்கியின்  இந்த திடீர் முத்தத்தை எதிர்கொள்ள முடியவில்லை.. அவள் கால்கள் வலுவிழப்பது போல தோன்றியது. அவள் உடல் நடுங்கியது.

ராக்கி மிகவும் தீவிரமாக ரசித்து அவள் உதட்டை சுவைத்துக்கொண்டு இருக்க.. ரதியோ.. அவனை தடுக்க முடியாமல் திண்டாடினாள் 

ரதியை முத்தமிட்டுக்கொண்டே அவளை தன் கைகளில் ஏந்தியவன் அங்கிருந்த கட்டிலுக்கு கொண்டு சென்று அவளை படுக்க வைத்தவன் . அவள் அருகில் அமர்ந்தவன் “என்னை பிடிச்சு தானே இந்த போட்டோவை எடுத்தே…சொல்லு ” என்று ரதியை ஒரு மார்க்கமாக பார்த்தான்.

அவன் பார்வையில் என்ன இருக்கிறது என்று அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“என்ன சொல்லு…” என்றான் குரலில் குழைவை தத்தெடுத்துக்கொண்டு…

“அஹ் .. அது.. ஆமா… ” என்று அவளையும் அறியாமல் வாய் தவறி சொல்லிவிட…

அடுத்த நிமிடம் கட்டிலில் படுத்திருந்தவள் மீது பாய்ந்தான்.

அதை எதிர்பார்காதவள் செய்வதறியாது திகைத்தாள்.

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.